Home » » ஒரே தடவையில் கிருமிகளை அகற்றும் கருவியை கண்டுபிடித்தது ஸ்ரீலங்கா கடற்படை!

ஒரே தடவையில் கிருமிகளை அகற்றும் கருவியை கண்டுபிடித்தது ஸ்ரீலங்கா கடற்படை!

கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் அதிகாரிகளால் ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்களின்படி,
“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினரால் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடற்படைத்தளபதி வைஸ் அத்மிரல் பியல் டி சில்வாவின் ஆலோசனைக்கமைய பொது மக்களின் வசிப்பிடங்கள் மற்றும் பொது இடங்களில் தொற்று நீக்கல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தின் பொறியியல் பிரிவின் அதிகாரிகளால் ஒரே தடவையில் முழு உடலிலுமுள்ள கிருமிகளை நீக்கும் வகையிலான கிருமி நீக்கி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
கடற்படைத் தளபதியின் பணிப்புரையின் கீழ் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிருமி நீக்கி கடற்படை முகாம்களில் பயன்படுத்தப்பட்டு வருவதோடு கடற்படை தலைமையகத்திலும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.










Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |