Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பிரித்தானிய பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

உலகளாவிய ரீதியில் இனம், மதம், மொழி, வயது, நாடு, தகுதி, பதவி என எதையும் பாராது அனைவரையும் மரண பயத்திற்குள்ளாக்கி ஆட்கொண்டுவரும் கொரோனா வைரஸ் தற்போது பிரித்தானிய பிரதமரையும் தொற்றியுள்ளது என பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 24 மணி நேரமாக சில அறிகுறிகளை உணர்ந்ததை அடுத்து பரிசோதனைக்குட்படுத்திய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது சுய தனிமைப்படுத்திக்கொண்ட பிரதமர் தொடர்ந்தும் வீடியோ வாயிலாக செய்திகளை வெளியிடுவேன் என தெரிவித்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை "லேசான அறிகுறிகளை" அனுபவித்து வந்த பிரதமர் ஜோன்சன் தனது தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டியின் ஆலோசனையின் பேரில் பரிசோதிக்கப்பட்டதாக பிரதமர் வாசஸ்தல செய்திகள் தெரிவித்துள்ளன.




Post a Comment

0 Comments