Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் அனைத்து பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டன! உறுதிப்படுத்தினார் கல்வியமைச்சர்


எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 6 ஆம் திகதி ஆரம்பமாகும் ஏப்ரல் விடுமுறையை ஆரம்பித்து  வழங்குவதற்கு  தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.
கல்வி அமைச்சில் தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

முன்னதாக வெளிவந்த செய்தயை மறுத்த கல்வி அமைச்சு மீண்டும் இன்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவிப்பை வெளியிடுவதாகக் கூறியிருந்தது. 

அதன் படி, இப்போது நடைபெறும் ஊடகவியல் சந்திப்பில், 

நாட்டின் அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி வரை மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். 


இரண்டாம் இணைப்பு
நாளையிலிருந்து ஏப்ரல் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் அனைத்தும் மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனா பீதியை அடுத்து, பொதுமக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் முதலாம் தவணைப் பரீட்சைக்கான விடுமுறையே தற்போதைய விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கொரோனா அச்சம் காரணமாக எதிர்வரும் 26ஆம் திகதி வரை பாடசாலைகள் அனைத்தும் உடனடியாக மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளின் எந்தவிதமான உண்மையும் இல்லை என கல்வியைமச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
உலகத்தை அச்சுறுத்தும் கொரோனா தொடர்பில் பொது மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளதுடன், பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவதில் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே இலங்கையில், கல்விச் சுற்றுலாக்களுக்கு தடை விதித்தது கல்வியமைச்சு. இந்த நிலையில், இன்றிலிருந்து எதிர்வரும் 26ஆம் திகதி வரை பள்ளிக்கூடங்களை தற்காலிகமாக மூடுவதற்கும் கல்வியமைச்சு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், அவ்வாறான எந்தவிதமான முடிவுகளும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளதுடன், சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் பள்ளிக்கூடங்கள் மூடப்படுமா இல்லையா என்பது தொடர்பில் இன்று ஆராய்ந்ததன் பின்னர் மாலை அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments