Home » » பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களில் ஒரு சாரார் மட்டும் கலந்து கொள்ள ஏனைய மாணவர்கள் பார்வையாளர்களாக ....

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களில் ஒரு சாரார் மட்டும் கலந்து கொள்ள ஏனைய மாணவர்கள் பார்வையாளர்களாக ....

( அஸ்ஹர் இப்றாஹிம்)

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளில்  மாணவர்களில்  ஒரு சாரார் மட்டும்  கலந்து கொள்ள ஏனைய மாணவர்கள் பார்வையாளர்களாக இருந்துவிட்டு செல்லும் கலாச்சாரம் பாடசாலைகளில் இருந்து ஒழிக்கப்பட்டு  ஒவ்வொரு மாணவரிடமும் மறைந்து கிடக்கும் திறமைகள் வெளிக்கொணர சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் போது பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவி செயலாளர் எம்.ரீ.ஏ. நிஸாம் தெரிவித்தார்.
 அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் ,
பாடசாலைகளில் சில மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தும் சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்கின்றார்கள் , சில மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்த சந்தர்பம் இல்லாமல் திறமைகள் அழிந்தவர்களாக அல்லது இல்லாமல் செய்தவர்களாக  எவருக்கும் தெரியாதவர்களாக இருந்து பாடசாலை கல்வியை முடித்துக் கொண்டு வெளியேறி விடுகின்றனர்.. எனவே இந்த நிலமையை மாற்றி கட்டாயம் ஒவ்வொரு மாணவனும் ஏதாவது ஒரு விளையாட்டு நிகழ்வில் பங்குபற்றக் கூடியதான வாய்ப்பை வழங்கினால்  இதுவரை நாம் அறியாத முகம் காட்டாத புதிய சாதனையாளர்களை எமது சமூகத்தின் மத்தியில் உருவாக்கலாம்.

இந்த நாட்டின் புதிய அரசாங்கத்தின் கல்வியமைச்சர் மாணவர்கள் பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளில் கட்டாயம் பங்கேற்ற வேண்டும் என்ற காரணத்தினால் பாடசாலைகளில் நடைபெற்றுவந்த முதலாம் தவணைப் பரீட்சையை இரத்துச் செய்து  மாணவர்கள் அனைவரும் தமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான தவணையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.எனவே முதலாம் தவணையில் மாணவர்கள் தமது உடல் ஆரோக்கியத்தை வளப்படுத்துவதன் மூலமாக உள ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்  . சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்பதற்கொப்ப கல்வி கற்பதற்கு தன்னை தயார் செய்கின்ற நிலமையை அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது. இப்போதுதான் கல்வியமைச்சின் கல்விப்புலம் விளைாட்டுத்துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படுகின்றது. இதற்காக கல்வியமைச்சரை எமது கல்வி சமூகம் நிச்சயமாக பாராட்டியே ஆக வேண்டும்.

இந்த உயர்ந்த தத்துவத்தைப் புரிந்து கொண்டு  எதிர்வரும் காலங்களில் சகல பாடசாலைகளிலும் முதலாம் தவணையின் போது விளையாட்டு நிகழ்வுகளை ஒழுங்கு செய்ய வேண்டிய கட்டாயமான நிலைக்கு சகல பாடசாலைகளும் தள்ளப்பட்டுள்ளன.
முதுமைப்பருவத்தை அடைந்துள்ள காலத்திலும் கூட  எஞ்சியிருக்கின்ற நினைவுகளை மீட்டுப் பார்த்தால்  பாடசாலைப் பருவத்தில் இடம்பெற்ற நினைவுகளைத்தவிர வேறு எதுவம் இருக்க முடியாது.  . பாடசாலை காலத்தில் எஞ்சியிருக்கின்ற நினைவுகளாக இவ்வாறான விளையாட்டு நினைவுகள் , மாணவர் மன்றங்கள் , அதே போன்று வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்ற போது செயற்படுகின்ற புறக்கிருத்திய நிகழ்வுகள் தான் இன்று எம் மனதிலே நிலையாக இறுதியாக எஞ்சியிருக்கின்றன. அந்த நினைவுகளின் தாக்கம் , அந்த நினைவுகள் எங்களுக்கு தருகின்ற ஆறுதல் என்பது எல்லா பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயமானதொரு  கடமையாக இருந்து  கொண்டிருக்கின்றது. பாடசாலைகளில் பல்வேறு விழாக்கள்  நடைபெறுகின்றன . அந்த விழாக்களில்  பரீ்ட்சைகளில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கும் ஏனைய துறைகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குமான பரிசளிப்பு விழாக்களும் இருக்கின்றன.அந்த விழாக்களுக்கு பெற்றோரையும் மற்றையவர்களையும் அழைக்கும் போது நூற்றிற்கு ஒரு வீதமானவர்களும் கூட பங்குபற்ற மாட்டார்கள் . வேறு ஏதாவது  நிகழ்வு இடம்பெறும் போது அதிக எண்ணிக்கையிலான பெற்றோரும் பழைய மாணவர்களும் கலந்து கொள்கின்றார்கள் என்றால் அந்த பாடசாலையில் அவர்கள் எதனை எதிர்பார்க்கின்றார்கள் என்ற முடிவுக்கு அதிபரும் ஆசிியர்களும் வரலாம். தேசியத்திலும் சர்வதேசத்திலும் இன்று பிரபல்யம் பெற்றுள்ளவர்களிடம் தாங்கள் எங்கு கல்வி கற்றீர்கள் என்று கேட்கும் போது பிரதானமாக முஸ்லீம்கள் மத்தியில் இரண்டு பாடசாலைகளை குறிப்பிடுவார்கள் . தென்னிலங்கையைச் சார்ந்தவர்கள் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியையும் , வட கிழக்கிலுள்ளவர்கள் கல்முனை ஸாஹிரா கல்லூரியின்  பெயரையும் சொல்லுவார்கள்.அப்படிப்பட்ட பாரம்பரியங்களை பெருமைகள்  அத்தனையையும் ஒருங்கே கொண்டிருக்கின்ற இந்த பாடசாலை பிரதானமாக அதன் அடிப்படையான பாரம்பரியமான பெறுமதியை பாதுகாப்பதற்கு பாடசாலை அதிபர்களிடமும் ஆசிரியர்களிடமும்  பாடசாலை சமூகத்திடமும் வேண்டி நிற்கின்றது.

கல்முனை ஸாஹிராக் கல்லூரி எதிர்காலத்தல் இப்பிரதேசத்தில் மாத்திரமல்ல தேசிய ரீதியிலும் பல சாதனைகளை ஏற்படுத்தக்கூடிய ஒன்றாக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டுமானால் அதிபர் ஆசிரியர்களுடன் கல்வி சமூகமும் இணைந்து கல்வித் திணைக்களத்தோடும் கல்வியமைச்சோடும் எல்லா மட்டங்களோடும் தமது தொடர்புகளை உறவுகளை மிகவும் நெருக்கமாகவும் இறுக்கமாகவும் அவர்கள் பேணிவருகின்ற போதுதான் இப்பாடசாலை அதனுடைய பழைய பாரம்பரியத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்ற நல்ல செய்தியை இந்த இடத்தில் கூற வைக்க விரும்புகின்றேன்.
என்று தெரிவித்தார்.  

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |