Home » » ஐ.நா சபையில் வெளிவந்த இலங்கையின் இறுதி முடிவு! எதிர்க்கத் தொடங்கிய உலக நாடுகள்

ஐ.நா சபையில் வெளிவந்த இலங்கையின் இறுதி முடிவு! எதிர்க்கத் தொடங்கிய உலக நாடுகள்

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கை இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தமைக்கு இங்கிலாந்தும் கனடாவும் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன “ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தால் இணை அனுசரணை வழங்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களில் இருந்து விலகுவதாக” அறிவித்திருந்தார்.
இலங்கையின் இந்து முடிவு “மனித உரிமைகளைப் பேணி மீள்நல்லிணக்கம்,நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவற்றை நிலைநாட்டுவது குறித்து அதீத கவனம் செலுத்தும்படி இலங்கையை வற்புறுத்திக் கோருவதாக” பிரிட்டனின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலவலகத்துக்கான இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபு தெரிவித்தார்.
இதேவேளை, “இலங்கையின் இந்த முடிவு கனடாவை ஆழ்ந்த அதிருப்தியில் ஆழத்தியிருப்பதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் பிராங்கோயிஸ் பிலிப்சம்பைன் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |