Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு- உன்னிச்சைப் பகுதியில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் 18 வயது இளைஞன் பலி...!!



ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உன்னிச்சை - கரவெட்டியாறு வயற்பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (08.11.2020) உழவு இயந்திரம் தடம் புரண்டதில் 18 வயதுடைய வாலிபர் உயிரிழந்துள்ளார். மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

அருணாச்சலம் அஜித்குமார் என்பவரே உயிரிழந்தவரென ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆயித்தியமலை பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த வாலிபர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறாதவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் முதலாம் பிள்ளையாவார். இவ்வாலிபர் தனது நண்பனுடன் உழவு இயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரம் தடம்புரண்டு வாய்க்காலில் விழுந்துள்ளது.

Post a Comment

0 Comments