Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பகுதியில் யானைகளின் அட்டகாசத்தினால் பொதுமக்கள் பாதிப்பு


மட்டக்களப்பு - வாகரை, புணாணை கிழக்கு கிராம அதிகாரி பிரிவிலுள்ள மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் யானைகளின் அட்டகாசத்தில் பல தோட்டப் பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த பகுதியில் நேற்றிரவு யானைகள் தோட்ட பாதுகாப்புக்கு அமைக்கப்பட்ட வேலியை உடைத்து தோட்டத்திற்குள் புகுந்து தென்னை, மா, பலா போன்ற மரங்கள் மற்றும் கச்சான், பப்பாசி உள்ளிட்ட பயிர்களை துவசம்சம் செய்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குகனேசபுரம் கிராமமானது 2007ம் ஆண்டு முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனால் உருவாக்கப்பட்டுள்ளது.


இக்கிராமத்தில் 65 குடும்பங்களில் 350 பேர் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








Post a Comment

0 Comments