Home » » மட்டக்களப்பு வவுணதீவில் பொலீஸ் சாஜன் ஒருவர் அடித்து கொலை சந்தேகத்தில் இருவர் கைது !

மட்டக்களப்பு வவுணதீவில் பொலீஸ் சாஜன் ஒருவர் அடித்து கொலை சந்தேகத்தில் இருவர் கைது !



(சரவணன்)
மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள ஆயித்தியமலை மூன்றாங் கட்டை பிரதேசத்தில் பொலீஸ் சாஜன் ஒருவர் அவரின் பண்ணை வீட்டின் முன்னாள் வீதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலீசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருபவரும் மட்டக்களப்பு புதூர் 7 ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த தைச் 55 வயதையுடைய 3 பிள்ளைகளின் தந்தையான தம்பாப்பிள்ளை சிவராசா என்பவரே இவ்வாறு அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த பொலிஸ் சார்ஜன் சம்பவதினமான நேற்று (05) இரவு வவுணதீவு ஆயித்தியமலை வீதியிலுள்ள 3ம் கம்டை பிரதேசத்தில் தனது பண்ணையினை சென்றிருந்த நிலையில் இரவு 11 மணியளவில் பண்ணையில் இருந்து வீதிக்கு வந்தபோது அங்கு இருவர் பதுங்குவதை கண்டு யார் எனவும் கேட்ட போது அவர்கள் இல்லை மது அருந்துவதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பொலிஸ் சாஜன் இல்லை நீங்கள் மாடு களவு எடுக்க வந்துள்ளீர்களா எனகேட்ட போது அவர்கள் குறித்த சாஜனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில் இருவருக்கும் இடையில் சண்டை மூண்டதையடுத்து சாஜன் மீது இருவரும் அங்கிருந்த பொல்லால் தலையில் தாக்கியதையடுத்து அவர் வீதியில் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரின் உடலை இழுத்து வீதியின் ஓரத்தில் போட்டுவிட்டு இருவரும் தப்பி ஓடியுள்ளனர் என இச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்துவரும் ஆயித்தியமலை தேவாலய வீதயைச் சேர்ந்த 31 வயதுடைய முகமட் அஸ்மி, வவுணதீவு நாவற்குடா ஈச்சந்தீவைச் சேர்ந்த குணசேகரன் சுரேந்திரன் என்பவர்களின் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் சாஜனின் தாக்குதலில் கைது செய்யப்பட்ட முகமட் அஸ்மி, அடிகாயங்கள் உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர் .

இதேவேளை சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாண சிரேஷ;ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜெயவர்த்தன, மட்டக்களப்பு உதவி பொலிஸ் மா அதிபர். லஷ;சிறி விஜயசேகர ,சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவான் மெண்டிஸ் ஆகியேர் சென்று பார்லையிட்டு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிசாருக்கு ஆலோசரனகள் வழங்கினர்.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.சி. றிஸ்வான் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார். இதனையடுத்து சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |