Advertisement

Responsive Advertisement

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாயிலையில் தாதியர்கள் போராட்டம் !



(பாறுக் ஷிஹான்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாயிலையில் தாதியர்கள் ஒருமணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாயிலையில் பணி புரியும் தாதியர் மேற்பார்வையாளர் எதிராக முறைப்பாடுகளை முன்வைத்து வியாழக்கிழமை(6) முற்பகல் வைத்தியசாலை முன்றலில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட தாதியர்கள் தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாமல் தாதியர் மேற்பார்வையாளர் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் இகாணொளி இமற்றும் புகைப்படங்களை அடுத்து தங்களது பணியினை மேற்கொள்ள முடியாதவாறு உளவியல் ரீதியில் தொல்லை கொடுப்பதாக தாதியர் மேற்பார்வையாளருக்கு எதிராக பணிப்பகிஷ்கரிப்பு பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டிற்கு உள்ளான தாதியர் மேற்பார்வையாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தங்களது பணியை மேற்கொள்ளாது நடமாடி திரிவதாகவும் இதனைத் தட்டிக் கேட்கும் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக குறிப்பிட்டார்.



இதனைத்தொடர்ந்து வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எஃப். ரகுமான் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறித்த தாதியர் மேற்பார்வையாளர் அனைத்து தாதியர் மீதும் குற்றம் சுமத்துவதை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றார். அவரது கட்டுப்பாடுகளின் கீழ் இயங்காத தாதியர் மீது பொய் குற்றச்சாட்டுகள் முன்வைத்து வருகின்றார். இவர் கடமைகளை மேற்கொள்ளும் ஏனைய தாதியர்களை அனுமதி இன்றி படம் பிடித்தல் வைத்தியசாலை நிர்வாகத்திற்கு தெரியாமல் நன்கொடைகளை பெறுவது போன்ற குற்றச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அதற்கான விசாரணை நிர்வாகத்தினால் முன்னெடுக்க படுகின்ற போது நிர்வாக சீர்குலைக்கும் வண்ணம் அவர் செயற்படுவதாக தெரிவித்தார்





























Post a Comment

0 Comments