Advertisement

Responsive Advertisement

காக்காச்சிவட்டை விஷ்னு வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டிகள்

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட  காக்காச்சிவட்டை விஷ்னு வித்தியாலயத்தின் 2020ஆம்  ஆண்டுக்கான  மெய்வல்லுனர் திறனாய்வு இல்ல விளையாட்டுப் போட்டியானது (05.04.2020) நேற்று  பிற்பகல் பாடசாலை மைதானத்தில் பாடசாலை அதிபர் சிவநேசராசா தலைமையில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பிரதம  பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர், இதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன்  விளையாட்டு  நிகழ்வுகள் ஆரம்பமானது,

இவ் விளையாட்டு நிகழ்வுகளில் பாடசாலை மாணவர்களின் மெய்வல்லுனர் போட்டிகள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இப் பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு, அதிதிகளின் உரைகளுடன் விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.

இவ் விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன், வெல்லாவெளி பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன்  ஆகியோரும் பட்டிருப்பு கல்வி வலய உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.









Post a Comment

0 Comments