Advertisement

Responsive Advertisement

கிழக்கிலிருந்து கூட்டமைப்புக்கு வந்தது அழைப்பு!

கிழக்கு மாகாண தமிழ் மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு பொதுச் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட முன் வந்திருக்கும் நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பும் முன்வர வேண்டும் என கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி. சிவநாதன் தெரிவித்துள்ளார்.
கிழக்கு தமிழர் ஒன்றியம் எல்லா கட்சிகளையும் ஒன்றிணைப்பதற்காக பொது மக்களை அறிவூட்டும் துண்டுப் பிரசுரம் விநியோகிப்பதற்கான ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
தேர்தல் திணைக்களத்திலே எங்களுக்கான பொதுசின்னம் அறிவிக்கப்பட்ட பின்னர் பொது மக்களுக்கு அந்த சின்னத்தை வெளிப்படுத்துவோம்.
கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் எதிர்காலநிலை கருதி எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுசின்னத்தில் போட்டியிட முன்வந்துள்ளனர்.
எனவே பொது சின்னத்தில் கீழ் போட்டியிடுவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அன்பான வேண்டுகோள் விடுக்கின்றோம்.
2009 நாடாளுமன்றத்தில் தேர்தல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் பிரிவு 8 ஏ என்ற பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட கட்சிகள் சேர்ந்து ஒன்றிணைந்து அவர்களுக்கான பொதுசின்னம் தேர்தல் ஆணையாளரால் வழங்கப்படும்.
அதனடிப்படையில் நாங்கள் தமிழ் மக்களின் நன்மைகருதி கிழக்கில் இருக்க கூடிய எல்லா கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு தேர்தல் கூட்டு ஒன்றை ஏற்படுத்தி அதற்கு ஒரு பொதுவான சின்னத்தை தோற்றுவித்து அதில் தேர்தலில் களமிறங்கும் ஒரு கூட்டு தலைமைத்துவ பணியை மாத்திரம் ஒன்றினைத்து ஒன்றித்து அந்த பொதுசின்னத்தின் கீழ் எல்லா கட்சிகளையும் போட்டியிட வைப்பது தான் எமது பணியாக இருக்கும்
எனவே உங்களுடைய தனிப்பட்ட சுயநலனுக்காக பிரிந்து சென்று தேர்தலை சந்திக்க நேர்ந்தால் அது கிழக்கு மாகாணத்தை பெறுத்தளவில் ஒரு துரதிஷ்டமான சம்பவம் என எங்களால் கூறமுடியும்.
அதேவேளை இதனால் தமிழ் மக்களுக்கு நீண்ட இழப்பு ஏற்படும் என்பதை கருத்தில் எடுத்து கிழக்கு தமிழர் எடுக்கும் இந்த முயற்சிக்கு தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கி செயற்பட வேண்டும் என்றார்.

Post a Comment

0 Comments