நூற்றுக்கணக்கான யானை கூட்டம் ஒன்று பிரதான வீதியின் அருகே நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
திடீரென காரைதீவு மாவடிப்பள்ளி எல்லையை கடந்து ஊருக்குள் பிரவேசித்த சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதன்கிழமை(19) மதியம் யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குறித்த யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து வருகின்றனர்.
இதனால் மாவடிப்பள்ளி பாலத்தின் அருகே போக்குவரத்து செய்யும் பொதுமக்கள் அவ்விடத்தில் குவிந்து யானைக்கூட்டத்தை அவதானிப்பதை காணமுடிகிறது.
மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments: