அந்தவகையில் மாணவர்களை கண்காணிக்க பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில் ஆர்வம் கொண்ட பிரதிநிதிகளை நியமித்து பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாடசாலையொன்றுக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து குறித்த விசேட வேலைத்திட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றால் அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்திற்கு தகவல் வழங்குவதற்கு 0777128128 என்ற தொலைபேசி இலக்கமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் முதற்கட்டமாக இலங்கையில் காணப்படும் பாடசாலைகளில் அதிகளவு போதைப்பொருள் விநியோக மற்றும் பாவனை நடவடிக்கைகள் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளன.
அதன்படி மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலுள்ள 49 பாடசாலைகளை இலக்காக கொண்டு 'பாதுகாப்பான நாளைய தினம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இந்த வேலைத்திட்டம் கல்வியமைச்சால் அறிமுகப்படுத்தப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments