Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மின்சார கசிவு காரணமாக மக்கள் அச்சம்-கல்முனையில் சம்பவம்

பாறுக் ஷிஹான்

மின்சார கசிவு காரணமாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில் இலங்கை மின்சார சபையின் அலட்சியத்தன்மை தொடர்கதையாகவே உள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை மின் பொறியலாளர் பிரிவில் கடந்த 4 நாட்களிற்கு மேலாக மின்கம்பத்துடன் இணைந்த மின்பிறப்பாக்கி(டிரான்ஸ்போமர்)  மேலான உள்ள மின்கம்பிகளில் அபாயகரமாக மின்கசிவு ஏற்பட்டுள்ளது.

அதிகளவான மக்கள் பயன்படுத்தும் இஸ்லாமபாத் மற்றும் கல்முனை சிங்கள மகாவித்தியாத்திற்கு அண்மித்த சந்தி ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது.
இரவு வேளையில் தொடரும் இம்மின்கசிவு காரணமாக அவ்வீதியால் பயணம் செய்யும் மக்கள் அச்சத்துடன் பயணங்களை மேற்கொண்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

எனவே இவ்விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


Post a Comment

0 Comments