Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வாய்ப்பு!

தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

ராஜகிரிய, கோட்டே பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அமைச்சர் பந்துல குணவர்த்தன உரையாற்றுகையில் இதனைக் குறிப்பிட்டார்.

எந்தவித அரசியல், கட்சி பாகுபாடுமின்றி அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Post a Comment

0 Comments