Home » » 72 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்

72 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சாய்ந்தமருதின் முதிசங்களான பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த இலங்கை திருநாட்டின் 72 வது சுதந்திர தினத்தையொட்டிய நிகழ்வுகள் இன்று காலை சாய்ந்தாமருது பொலிவேரியன் ஐக்கிய விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக அமைந்திருக்கும் கழகத்தின் தலைமைக்காரியாலயத்தின் முன் கழகத்தின் தலைவரும் , அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோஸ்தருமான ஏ.எம்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது .

கழகத்தின் செயலாளர் ஏ.ஸி.ஏ.நஜீம் , பொருலாளர் முஹம்மது ஹனீஸ் , கழகத்தின் ஆலோசனை சபை உறுப்பினரும் சிரேஸ்ட ஆசிரியருமான எம்.ஐ.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட கழகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மைதானத்தை சுற்றிவர மரக்கன்றுகளும் சுதந்திரதின ஞாபகார்த்தமாக நாட்டியும் வைக்கப்பட்டது
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |