Home » » தேசியத் தலைவரின் வழிகாட்டலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர் துரைராசசிங்கம்.

தேசியத் தலைவரின் வழிகாட்டலைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் அற்றவர் துரைராசசிங்கம்.



தமிழர் அரசியலில் மாற்று அணியின் உருவாக்கம் என்பது தேசியத் தலைவரின் வழிகாட்டலுக்கு முரணானது என்ற கருத்தை இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் துரைராசாசிங்கம் தெரிவித்துள்ளார்.

இவருடைய இக் கூற்றானது தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களையும் கேள்விகளையும் தோற்றுவித்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கவில்லை எனவும் கூட்டமைப்பின் உருவாக்கத்தில் விடுதலைப் புலிகள் எவ்வித பங்கும் வகிக்கவில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்துவரும் நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அவர்கள் இவ்வாறு விடுதலைப் புலிகளுடைய புகழைப் பாடுவதை பார்க்கின்றபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இப்பொழுதே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவட்டார்கள் என்று எண்ணத் தோன்றுகின்றது.

தேர்தல் காலத்தில் விடுதலை புலிகளின் புகழைப் பாடுவதும் பின்பு விடுதலைப்புலிகளும் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டவர்கள் விடுதலைப்புலிகளாலும் அனேகமான மக்கள் கொல்லப்பட்டனர்,காணாமல் ஆக்கச்செய்யப்பட்டனர் என்று பாராளுமன்றத்திலும்,சர்வதேசத்திலும் கூறுவது வழக்காமான இவர்களது செயற்பாடாகும்.
கட்சியினுடைய பொதுச் செயலாளராக இருந்து தமிழ் மக்கள் நலன் சார்ந்து பேச வேண்டிய சந்தர்ப்பங்கள் எல்லாவற்றையும் கோட்டைவிட்டு இன்று தாங்கள் உத்தமர்கள் போலவும் விடுதலைப்புலிகளின் ஏக பிரதிநிதிகள் எனவும் கூறி மக்கள் முன் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசியத் தலைவரின் கருத்துக்கு முரணாக ஒரு மாற்றுத் தலைமை உருவாகியுள்ளது என கருத்து கூறும் இவர்கள் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கைக்கு முரணான தமிழ் மக்களுக்கும் எதிரான வரவுசெலவுத்திட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்தனர் மேலும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளையும் அழிப்பதற்கு இலங்கை அரசால் கொள்வனவு செய்யப்ட்ட ஆயுதங்களுக்கு தமிழ் மக்களை வரி செலுத்தவும் வைத்துள்ளார்கள்.

மேலும் தமிழரசுக் கட்சியின் எழுபதாவது ஆண்டு நிறைவு விழாவில் விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டது ஒரு நல்லவிடயமாக இருக்கலாம் என்று கூட்டமைப்பின் தலைவர் பகிரங்கமாக கூறியிருந்தார்.இன்று இவ்வாறு வீர ஆவேசப் பேச்சுக்களை பேசும் துரைராஜசிங்கம்  அதே மேடையில் ஒரு மறுப்பு தெரிவிக்காமல் வாய் மூடி மெளினியாக இருந்துவிட்டு இன்று ஏதோ திடீர் என்று ஞானம் பிறந்தது போல் கருத்து தெரிவிப்பது. இவர்களது இரட்டை நிலைப்பாட்டை மிகத் தெளிவாக காட்டுகின்றது எனலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழர் விரோத செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் ஒரு மாற்று அணி உருவாகியுள்ளது அவ் மாற்று அணியினால் தங்களது பாராளுமன்ற ஆசனங்களுக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்ற மனோநிலையில் தான் இவ்வாறு விடுதலைப் புலிகளை நினைவு கூர்ந்து உள்ளார் என எண்ணத் தோன்றுகின்றது.

கிழக்கு மாகாண சபையில் துரைராசசிங்கமும்,தண்டபாணியும் பொம்மைகளாக இருந்து கொண்டு கூட்டமைப்புக்கு 11 உறுப்பினர்களும் இருந்தும் 7 உறுப்பினர்களை கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுத்து நஸீர்அகமட்டை முதலமைச்சராக்கி கிழக்கு மாகாணத்தையே முஸ்லீம்களுக்கு தாரைவார்த்து கொடுத்தனர்.

இவர் பிரபாகரனைப்பற்றியும் தமிழ் தேசியத்தை பற்றியும் கதைப்பற்கு முன் கடந்த எழுபது வருடகாலம் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களையும்,போராட்டத்தையும் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு முண்டு கொடுத்து நீர்த்துப்போகச் செய்த இவர்களுக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்தபாடம் புகட்டுவார்கள் என புத்திஜீவிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |