( அஸ்ஹர் இப்றாஹிம்)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் தேசிய ரீதியில் நடாத்திய இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது 2019 , நீதிநூல் ஒப்பவித்தல் போட்டியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை )களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த களுவாஞ்சிகுடி சைவ மகாசபை அறநெறி பாடசாலை சார்பாக கலந்து கொண்ட தரம் 3 ஐச் சேர்ந்த சபீத்திரன் கனிஸ்கா , தரம் 7 ஐச் சேர்ந்த மதிசீலன் கிரோஜன் ஆகியோர் முதலாம் இடத்தை பெற்றுள்ளனர். இதே வேளை தரம் 11ஐச் சேர்ந்த ஜெயமாரன் ஜெயடிதுஸா விசேட பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
0 Comments