Home » » கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

 அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை மைதானத்தில் அதிபர் எஸ்.கலையரசன் தலைமையில் இடம்பெற்றது.
நல்லதம்பி , தில்லையம்பலம் , வில்சன் , யோகம்  இல்லங்களுக்கிடையில் இடம்பெற்ற மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டிக்கு கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கல்முனை கல்வி வலய உடற்கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் , உடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் , கோட்ட கல்விப் பணிப்பாளர் , பாடசாலையின் ஓய்வு பெற்ற அதிபர்கள் , பாடசாலைகளின் அதிபர்கள் , ஆசிரியர்கள் , அரசியல் பிரமுகர்கள் , பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட மேற்படி இல்ல விளையாட்டுப் போட்டியில் தில்லையம்பலம் இல்லம் 521 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தையும் , வில்சன் இல்லம் 442 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும் , நல்லதம்பி இல்லம் 366 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் , யோகம் இல்லம் 347 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.





சர்வதேச கராட்டி போட்டியில் பங்கேற்று இலங்கை திருநாட்டிற்கும் , பிரதேசத்திற்கும் பெயரையும் புகழையும் ஈட்டித் தந்த கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த கராட்டி வீரர் எஸ்.பாலூராஜ் பாடசாலை சமூகத்தினால் இவ் விளையாட்டு விழாவின் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |