(நூருல் ஹுதா உமர்)
சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நாட்டின் 72வது சுதந்திர தின நிகழ்வும் மரநடுகையும் சாய்ந்தமருது பொது நூலக வீதி தாமரைக்கேணி தோனா முன்றலில் இன்று (04) காலை இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், சிலோன் மீடியா போரத்தின் பணிப்பாளர்களான அம்பாறை மாவட்ட கட்டடங்கள் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.ஸாஹிர், உலக சமாதான தூதுவர் ஏ.ஹிபதுள் கரீம், தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர் பொறியியலாளர் ஏ.எம்.அஸ்லம் சஜா, சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவரும், முபாறக் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளருமான
எம்.எஸ்.எம்.முபாறக் மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.ஜஃபர், கணக்காளர் ஏ.எல்.எம்.நஜிமுதீன், சிலோன் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் ஏ.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் யூ.எல்.நூருல் ஹூதா, உப தலைவர் எஸ். அஷ்ரஃப்கான், பிரதித் செயலாளர் எம்.எம்.ஜபீர், செயற்குழு உறுப்பினர்கள், சமூர்த்தி அதிகாரிகள், ஸஹிரியன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எஸ்.எச்.ஜிப்ரி, செயலாளர் ஏ.எம்.காலிதீன், சாய்ந்தமருது தொழிற் பயிற்சி அதிகாரசபை அலுவலக அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள், கழக வீரர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தாமரைக்கேணி தோனாவின் முன்றலில் தேசியக் கொடியேற்றப்பட்டதுடன் தோனாவினை சுற்றி நிகழ்வின் அதிதிகளால் மரங்கள் நடப்பட்டது.
UMAR LEBBE NOORUL HUTHA UMAR
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564
0 Comments