Advertisement

Responsive Advertisement

அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து - சிறுமி பலி - ஆபத்தான நிலையில் 7 பேர்

தம்புளளை - மாத்தளை ஏ9 பிரதான வீதியின் நாலந்த பிரதேசத்தில் இன்று காலை ஏற்பட்ட விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
தனியார் பேருந்து இரண்டு நேருக்கு நேர் மோதியதில் இந்த பாரிய விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
தம்புளை விகாரை சந்தி பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாத மலைக்கு சுற்றுலா பயணிகளை அழைத்து சென்ற பேருந்தும் கண்டியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி சென்ற பேருந்தும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
காயமடைத்தவர்களில் 7 பேர் ஆபத்தான நிலையில் மாத்தளை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 12 வயதுடைய சிறுமி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments