Advertisement

Responsive Advertisement

அரசாங்கத்திற்குள் மோதல் - ஜனாதிபதியுடன் இணையுமாறு சஜித்திற்கு அழைப்பு



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இணையுமாறு சஜித் பிரேமதாசவுக்கு ஆளும் கட்சியில் இருந்து அழைப்பு கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
எனினும் கோட்டாபய ராஜபக்சவுடன் இணையும் எந்த தேவையும் தமது கட்சிக்கு இல்லை எனவும், எதிர்வரும் பொது தேர்தலின் பின்னர் சஜித் பிரேமதாசவிடம் நாட்டை ஒப்படைக்க தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இரத்தினபுரியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்குள் பாரிய மோதல் நிலவுவதாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் கூறி வருகின்றனர் எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments