(எஸ்.நவா)
போரதீவுப்பற்று பிரதேசத்தில் கிழக்கு பல்கலைகழக பழைய மாணவர் ஒன்றியம் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச்சபை இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் பெருவிழா!
கிழக்கு- பல்கலைகழக பழைய மாணவர் ஒன்றியமும் கிழக்கிலங்கை இந்து சமய சமூக அபிவிருத்திச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட தைப்பொங்கல் விழா திக்கோடை அம்பாரைப்பிள்ளையார் ஆலய முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்றியத்தின் தலைவர் திருசி.தணிகசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வின் போது பிரதமஅதிதிகளாக எஸ்.நவநீதன் பணிப்பாளர் கலாச்சார திணைக்களம் கிழக்கு மாகாணம் எஸ்.புவனேந்திரன் உதவிப்பிரதேச செயலாளர் போரதீவுப்பற்று சிறப்பதிதிகளாக திரு.அருளானந்தம் கிழக்குப்பல்கலைக்கழக சிரேஸ்ர விரிவுரையாளரும் வைத்தியரும் கீர்த்திகாரண வர வீடமைப்புப்திட்ட பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விமான்கள் ஆன்மீக அதிதிகள் பிரரேதச அமைப்புக்கள் பொதுமக்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந் நிகழ்வில் கலாச்சாரப் தமிழ் பொங்கல் எழுச்சிப்பவணி பாரம்பரிய மங்கள விளக்கேற்றல் வயல் கொஞ்சும் வரவேற்பு நடனம் மண்மணக்கும் கிழக்கின் பொங்கல் படுவானின் பாரம் பெரியவிளையாட்டுக்கள் கலைகொஞ்சும் மீனகக்கூத்து கிழக்குப்பல்கலைக்கழகமாணவர் பொங்கல் அளிக்கை உழைத்து உணவளித்த உழவர்கள் கௌரவிப்பு போன்ற பலதரப்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது விசேட அம்சமாகும்.
இவ் விழாவிற்கு பல்வேறு நில பிரதேசத்திலும் இருந்து பல தரப்பட்ட மக்கள் இன மத பேதமின்றி கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments