Advertisement

Responsive Advertisement

சிறார்களுக்குகற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தார் த.சித்தார்த்தன்

சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் சனசமூக நிலையத்தினரின் வேண்டுகோளின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் சிறார்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பாடசாலை விடுமுறைகள் முடிந்து பாடசாலைகள் மீளத்திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் சுதுமலைப்பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியுதவுமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து தனது சொந்த நிதியிலிருந்து மேற்படி கற்றல் உபகரணங்களை வழங்கியுள்ளார்.

01.01.2020 புதன்கிழமை மாலை 04 மணியளவில்  சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் சனசமூக நிலையத்தின் தலைவர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் கலந்துகொண்டு மேற்படி உதவிகளை மாணவர்களிடம் கையளித்தார்.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன்வலி.தெற்கு (சுன்னாகம்) பிரதேச சபை உறுப்பினர் திருமதி ஸ்ரீகாந்தவதனி ஆகியோருடன்பயனாளர்கள்ஊரவர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


யோ.கமல்ராஜ்
0750623787

Post a Comment

0 Comments