Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்து கிறிக்கற் சுற்றுப் போட்டி

( அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்துள்ள 8 ஓவர்கள் கொண்ட  மென்பந்து கிறிக்கற் சுற்றுப் போட்டி பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் தேற்றாத்தீவு உதயம் விளையாட்டுக்கழக மைதனத்தில் ஆரம்பமாகவுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த 32 முன்னணி விளையாட்டுக்கழகங்கள் மேற்படி சுற்றுப் போட்டியில் பங்கேற்கவுள்ளன.
லீக் அடிப்படையில் இடம்பெறவுள்ள மேற்படி சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியீட்டும் கழகங்களுக்கு  சம்பியன் கிண்ணத்துடன் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படவுள்ளன.

Post a Comment

0 Comments