Home » » 2020 ஆம் ஆண்டுக்குரிய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதலும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும்

2020 ஆம் ஆண்டுக்குரிய மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதலும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடியில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் 2020  ஆம் ஆண்டுக்குரிய மாணவத்தலைவர்களுக்கான சின்னம் சூட்டுதலும் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வும் பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

பாடசாலை ஒழுக்காற்று சபைத்தலைவர் எஸ்.சுரேந்திரனின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் சிரேஸ்ட மாணவத்தலைவராக ஆர்.மோகனப்பிரியனும் , சிரேஸ்ட மாணவத் தலைவியாக வீ.குவீனாவும் , உதவி சிரேஸ்ட மாணவத்தலைவராக ஜே.அபிசாகரனும் , உதவி சிரேஸ்ட மாணவத்தலைவியாக என்.பிரியவர்த்தனாவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |