தனது தேசிய தலைவர் பிரபாகரன் மாத்திரமே என கருணா தெரிவித்துள்ளமையானது அவருக்கு மனநிலை பாதிப்பு அல்லது வேறு ஏதாவது ஒன்று இருக்கவேண்டுமென தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க.
அனுராதபுரத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரபாகரனிடம் இருந்து தனது உயிரை மிகவும் கஷ்ரப்பட்டு காக்க முன்னைய அரசாங்கத்துடன் இணைந்திருந்தார் என்பதை கருணா நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.அத்துடன் விடுதலைப்புலிகளால் அவரது குடும்பத்துக்கும் கடும் அச்சுறுத்தல்கள் இருந்தன.
எனவே முன்னர் தனக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இருந்த நிலையில் தற்போது தனது தேசிய தலைவர் பிரபாகரன்தான் என அவர் தெரிவிக்கிறார் எனில் நாட்டில் ஏனையோருக்கு சட்டம் செயற்படுத்தப்படுவது கோல கருணாவுக்கு எதிராகவும் செயற்படுத்தப்படவேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments: