கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் பிரவேசித்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) மாலை 3.30 மணியளில் தேசிய மற்றும் வெளிநாட்டு பிரயாணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட 9 சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராஜகிரிய பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் அனைவரும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 31 – 68 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments