Advertisement

Responsive Advertisement

அம்பிளாந்துறையில் மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அம்பிளாந்துறை கலை மகள் மகா வித்தியாலயத்தில் (29)புதன்கிழமை இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகள் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் ஆரம்பமான போட்டியில்அணிநடை உடற்பயிற்சிகண்காட்சிஇ அஞ்ல் ஓட்டம் குறுந்தூர ஓட்டம் வினோத உடைபோட்டி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இல்லங்கள் சோடனை செய்யப்பட்டு நடைபெற்ற இப்போட்டியில் குறிஞ்சி,முல்லை,மருதம் மூன்று இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது வெற்றியீட்டிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் சிறந்த விளையாட்டு வீரர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் சு.தேவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்இ மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் சி.சிறீதரன்மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மண்முனை தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் சி.புஸ்பலிங்கம் உள்ளிட்ட  பலரும் கலந்துகொண்டனர்.











Post a Comment

0 Comments