மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இன்று(29) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் அதிபர் திருமதி சி.சுபாகரன் தலைமையில் நடைபெற்றது.இந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களும், விசேட அதிதியாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எஸ்.புண்ணியமூர்த்தி, கௌரவ அதிதியாக மட்டக்களப்பு தேசியக் கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் திருமதி டி.மோகனகுமார்,
அழைப்பு அதிதிகளாக மட்டு மாநகரசபை பிரதி ஆணையாளர் உ.சிவராஜ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் கே.ஹரிஹரராஜ், பிரதிக்கல்விப் பணிப்பாளர் திருமதி சு.குலேந்திரகுமார் அவர்களும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
சிறப்பாக இடம்பெற்ற பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வில் அதிதிகள் வரவேற்பு, விளையாட்டு சுடர் ஏற்றுதல், அணிநடை, உடற்பயிற்சி,, மைதான விளையாட்டுகள், அதிதிகள் உரை, பரிசு வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றதுடன், வின்சன் பாடசாலையின் 200 ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக மாணவிகளின் அணிவகுப்பு, பலூன்களை ஆகாயத்தில் பறக்கவிடுதல், ஆளுநருக்கு நினவுச் சின்னம் வழங்கி கௌரவித்தல் என்பன இடம்பெற்றன.











0 Comments