தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனுக்கும், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல முக்கியமான பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
மட்டக்களப்பு மேற்கு வலயம் எதிர்நோக்கும் ஆசிரியர் பற்றாக்குறை, அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் சட்ட விரோத மண் அகழ்வு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் நிலவும் வைத்தியர் மற்றும் ஆளணியரின் பற்றாக்குறை போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், மேய்ச்சல் தரைப் பிரச்சினைகள், யானை வேலி தொடர்பான பிரச்சினைகள், திணைக்களங்கள் மற்றும் சுகாதார சேவை நிலையங்களில் காணப்படும் சமநிலையற்ற வளப்பகிர்வுகள், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பட்டதாரிகளின் வேலைவாய்ப்புகள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் சிறிநேசனால் ஆளுநரின் கவனத்திற்கு இதன்போது கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
இக் கலந்துரையாடல்கள் பயனுள்ளதாக நடைபெற்றதாகவும், கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு விரைவில் தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக ஆளுநர் உறுதியளித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.



0 comments: