Home » » சீரழிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த இலங்கையை மீட்டெடுத்து எதிர்காலத்தில் மூவின மக்களும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ இந்நாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைமைத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த அனைத்து மக்களும் பாராட்டுக்குரியவர்களாகும்.

சீரழிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த இலங்கையை மீட்டெடுத்து எதிர்காலத்தில் மூவின மக்களும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ இந்நாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைமைத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த அனைத்து மக்களும் பாராட்டுக்குரியவர்களாகும்.

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சீரழிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த இலங்கையை மீட்டெடுத்து எதிர்காலத்தில் மூவின மக்களும் சுதந்திரமாகவும் சுபீட்சமாகவும் வாழ இந்நாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைமைத்துவத்தை ஏற்படுத்திக் கொடுத்த  அனைத்து மக்களும் பாராட்டுக்குரியவர்களாகும்.

இவ்வாறு மாளிகைக்காடு ஜாஹிர் பௌண்டேசனின்   10 வது ஆண்டு நிறைவையொட்டி மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த  நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. ஸ்ரீயாணி விஜயவிக்ரம தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

எமது நாட்டிற்கு தற்போது ஒரு தைரியமான நேர்மையானதொரு  தலைமைத்துவம் கிடைத்துள்ளது எமது நாட்டை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்லக்கூடிய தலைமைகளுடன் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டிய மிகவும் பெறுமதி வாய்ந்த தருணமாக இதை நான் கருதுகின்றேன்.
 உண்மையில் எமது எதிர்காலத்தையும் எதிர்கால சந்ததியினரையும்  சிந்திக்க வேண்டியுள்ளது .
பாரிய யுத்தத்தினால் சீரழிந்து சின்னாபின்னமாகிப் போயிருந்த எமது தாய் நாட்டை மீட்டு அதனை  அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டு செல்லும்   அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னெடுப்புகளுக்கு  நாட்டிலுள்ள அனைவரும்  ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
 சிங்கள ,தமிழ் ,முஸ்லிம் மக்கள் அனைவரையும் ஓர் தாய் வயிற்று பிள்ளை போன்று அரவணைத்து செல்லவும் ஓர் தலைமையின் கீழ் அணிதிரளவும்  நல்லதொரு பொன்னான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
 கடந்த காலங்களில் அம்பாரை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பல வேலைத்திட்டங்களை நான் முன்னெடுத்துச் சென்றுள்ளேன்.
 தற்போது ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளையும் அபிவிருத்தி செய்ய முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபா அரசாங்கத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .  மேலும் பெண்கள் உரிமைக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் பலமுறை குரல் கொடுத்துள்ளேன். பெண்களின் முன்னேற்றம் ,சுயதொழில் முயற்சி , வேலைவாய்ப்பு  , அவர்களின் பாதுகாப்பு என்பவற்றை உறுதி செய்ய என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்
எதிர்வரும் காலங்களில் பொத்துவில் தொகுதியில் முன்னெடுத்துச் செல்லப்பட  திட்டமிடப்பட்டுள்ள  பெண்கள் சம்பந்தப்பட்ட சகலவிதமான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ்  இப்பிரதேச முஸ்லிம் பெண்களை இணைத்துக் கொள்வேன் என்பதை இவ்விடத்தில் உறுதியாகக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
 அம்பாரை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் இருப்பதை விட்டு மிகவும் பெருமை அடைவதோடு ,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 17 கட்சிகள் ஒன்றாக இணைந்து எங்களுடைய ஜனாதிபதி அதிமேதகு கோத்தபாய  ராஜபக்ஷவை வெற்றியடைய செய்வதற்கு  அனைவரும் ஒன்று சேர்ந்து  ஒத்துழைத்து  பாடுபட்டு வாக்களித்த அனைத்து மக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை  கூறிக்கொள்ள விரும்புகின்றேன் .
எதிர்காலத்தில் இன , மத , மொழி மற்றும் பிரதேசவாதங்களுக்கு அப்பால் நின்று செயற்பட்டு எல்லா இனங்களும் பரஸ்பர ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் வாழக்கூடிய ஸ்ரீலங்காவை கட்டியெழுப்ப அனைவரும் அணி திரளவேண்டும்.
என்று குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |