Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பன்முக ஆளுமை கொண்ட ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மறைவு ஒரு பேரிழப்பே : அதாஉல்லா இரங்கல் !!


நூருல் ஹுதா உமர் 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமான முன்னாள் அதிபரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான வானொலி புகழ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி அவர்களின் மரணத்தை ஒட்டி பல பிரமுகர்களும் அனுதாபம் தெரிவித்துவரும் நிலையில் தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் மாகாண சபைகள் உள்ளுராட்சி மன்ற அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தன்னுடைய இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார் அச் செய்தியில்,

இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்....!

மரணம் மாத்திரமே இந்த உலகத்தில் நிரந்தரமானது. அதில் ஒரு சிலரின் மரணச்செய்தி மனதை வதைக்கும்.
அவ்வாறுதான் இன்று சகோதரன் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் மரணச்செய்தி இருந்தது.

வரலாற்று தடம் பதித்த நேசத்துக்குரிய அறிவிப்பாளனாக மட்டுமல்லாமல் ஒரு சிறந்த கல்வியலாளராகவும், சமூக சேவையாளராகவும் பண்முக ஆளுமை கொண்டவராக இருந்தவரின் மறைவு நிச்சயமாக அது ஒரு பேரிழப்பாகவே இருக்கின்றது.

அவரின் மறைவினால் துயருறும் அவரது குடும்பத்தினர், உறவினர்களுக்கு கூற வார்த்தைகள் இல்லை.
அவரின் உயர்ந்த மறுமை வாழ்விற்காக பிரார்த்திக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564

Post a Comment

0 Comments