Advertisement

Responsive Advertisement

ரிசாத்தின் சுயநல அரசியல் போக்கை நிறுத்த சிவில் அமைப்புகள், ஜம்மியதுல் உலமா, முஸ்லீம் அறிஞர்கள் கவனமெடுக்க வேண்டும் : அஸ்மி அப்துல் கபூர்



நூருல் ஹுதா உமர்

நல்லாட்சி அரசால் தரமிறக்கி வைக்கப்பட்ட நீதியரசர் நவாஸ் மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் உங்களால் வாய் திறக்க முடியாது போனது ஒரு புறமிருக்க, வவுனியா அரச அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டதை இனவாதமாக காட்ட முனையும் ரிசாட் பதியுதீன் முஸ்லீம்களை நிம்மதியாக ஒரு போதும் வாழ விட மாட்டார் என இழப்பீட்டு ஆய்வு மையத்தின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வருமான அஸ்மி அப்துல் கபூர் தெரிவித்தார்.

 இன்று கொழும்பு மோதரையில் இடம் பெற்ற இழப்பீட்டு ஆய்வு மைய வருட ஆரம்ப கூட்ட தொடரில் அதன் தலைவர் அஸ்மி அப்துல் கபூர் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் பேசிய அவர், தனது சுய நல அரசியலுக்காக சிங்கள சமுகம் பெருவாரியாக வாக்களித்து உருவாக்கியிருக்கின்ற அரசின் மீது இன வன்ம கருத்துக்களை திணிப்பதால் இந்த சுய நல அரசியல்வாதி இரு சமுகங்களையும் நிரந்தரமாக பிரித்து நிம்மதி இழக்க வைக்க முடிவு கட்டியிருக்கிறார்.

இவரின் கடந்த கால அரசியல் அல்லாஹ், ரஸுல், பதூர் யுத்தமென கூறி போலியான மக்களை உணர்வூட்டியும் வருகிறார். இவருடைய சுயநல அரசியல் போக்கை நிறுத்த சிவில் அமைப்புகள், ஜமஅதுல் உலமா, முஸ்லீம் அறிஞர்கள் கவனமெடுக்க வேண்டும்.நாட்டின் ஜனாதிபதியை மக்கள் வாக்களித்து உருவாக்கி இருக்கிறார்கள் அவரை எடுத்தேன் கவுத்தோம் என முஸ்லீம்களை நிராகரிக்க சொல்ல றிசாட் பதியுதீனால் முடியாது.

தனது சுய நல அரசியலுக்காக சமுகத்தை அடகு வைக்க மீண்டும் றிசாட் தயாராகிறார். இந்த நிலையை அவர் மாற்றிக் கொள்வதே இந்த நாட்டில் வாழும் சகல இனங்களும் நிம்மதியாக வாழ வழியேற்படுத்த போதுமானது என்றார். 
 
UMAR LEBBE NOORUL HUTHA UMAR 
BBA (HRM), Dip.In. Journalism, IBSL, ICDL
+94 766735454 / +94 757506564

Post a Comment

0 Comments