Advertisement

Responsive Advertisement

சம்மாந்துறையில் வெடிபொருட்கள் மீட்பு-ஒருவர் கைது! தொடரும் விசாரணை

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நேற்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்தே துப்பாக்கி ரவைகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
இதன் போது சம்மாந்துறை சென்னல் கிராமம்-2 எனும் பகுதியில் வசிக்கும் முகம்மது இப்பராஹிம் முகம்மது இர்ஹான் வயது 40 என்பவர் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் தற்போது சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்த சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த சோதனை நடவடிக்கையின் போதே ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தும் ரவைகள் மற்றும் கலிபர் ரக துப்பாக்கிக்கு பயன்படும் ரவைகள் உள்ளிட்ட 5.5 எம்.எம். ரவைகள் 52 ,7.5 எம்.எம். ரவைகள் 12,வெடிமருந்து 600 கிராம், ஈயக் பந்து மற்றும் துண்டுகள் ஒரு கிலோ, 40 கிராம் கழற்றிய டெட்னேட்டர் பகுதிகள், 03 கட்டுத்துவக்கு குழாய் 01 , மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே அவ்வீட்டின் உரிமையாளரான குறித்த நபர் சந்தேகத்தின் பேரில் அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு சம்மாந்துறைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை குறித்த பகுதியிலிருந்து ரி56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்களும் அண்மையில் கைப்பற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments