Home » » மட்டு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்தி வைக்க தீர்மானம்

மட்டு மாவட்டத்தில் பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்தி வைக்க தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மணல், மண் அகழ்வதை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி வரை நிறுத்தி வைப்பது என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
 மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மண், மணல் உட்பட கனியவளங்களை சட்டவிரோதமாக அகழ்வு செய்தல், ஏற்றிச்  செல்லுதல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது
இக்கூட்டத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள், பொலிஸ், விசேட அதிரடிப்படையினர்,  திணைக்களத் தலைவர்கள் ஆகியோருட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அரசாங்கம் அதிபர் உதயகுமார் கருத்து தெரிவிக்கையில்,
 மணல் மற்றும் கனியவளங்களை சட்டவிரோதமாக அகழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும் இதனை பிரதேச செயலாளர்கள், பொலிஸார், அதிரடிப்படையினர் உள்ளிட்ட அதிகாரிகள்  கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கிறேன்
மேலும் இவ்வாறான  சட்டவிரோதமாக மணல் ஏற்றி செல்லும் போக்குவரத்து பாதைகள் சேதமடைந்து காணப்படுவதனால் பொது மக்கள் போக்குவரத்து செய்வது சிரமமாக உள்ளது.” என்றார்.
இதன்போது 2020 பெப்ரவரி முதலாம் திகதி வரை மண் அகழ்வதை நிறுத்திவைக்குமாறு இக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |