மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு நாள் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சுற்றிவளைப்பு 19ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 98 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 128 பேரும், போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 324 பேரும் காணப்படுவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேகத்திற்கிடமான 205 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புக்கு 1200 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது
0 comments: