Home » » கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் அதிகரிப்பு

கல்முனையில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகள் அதிகரிப்பு



(பாறுக் ஷிஹான்)
கல்முனை மாநகர சபை பகுதியில் கட்டாக்காலி மாடுகள் ,ஆடுகள் அதிகரிப்பினால் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளன.

தற்போது இப்பகுதியில் அடைமழை பெய்து வரும் நிலையில் பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகள் ஆடுகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.இதனால் இவ் வீதியில் பயணம் செய்யும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகி வருகின்றன.

இக் கட்டாக்காலிகள் கல்முனை மாநகர பிரதேசங்களில் பிரதான வீதிகள், பொதுச் சந்தைகள், விளையாட்டு மைதானங்கள், பாடசாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் பொது மக்களுக்கு பெரும் தொல்லையாக இருப்பதுடன் விபத்துகளும் நிகழ்கின்றன.

அத்துடன் இரவு நேரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கட்டாக்காலி மாடுகள் கூட்டம் கூட்டமாக நகரை ஆக்கிரமித்து, அசுத்தப்படுத்தி வருவதும் துர்வாடை வீசுவதும் வர்த்தகர்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்துகின்றது.

இவற்றைக் கருத்தில் கொண்டு கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் பொருட்டு அவற்றைக் கைப்பற்றி உரிமையாளர்களிடம் மாநகர சபை எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இதனை கட்டுப்படுத்த மாநகர முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |