Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் வரிச் சலுகை வழங்குவதில் சிக்கல் கிடையாது! பந்துல

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் வரிச் சலுகைகளை வழங்குவதில் சிக்கல் கிடையாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்றை கலைத்தாலும், அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகளை அமுல்படுத்துவதில் பிரச்சினை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வரிச் சலுகை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்ட தினம் முதல் இந்த சலுகைகள் அமுல்படுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி கடந்த 1ஆம் திகதி தொடக்கம் வரிச் சலுகைகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு மூன்று மாத காலத்திற்குள் நாடாளுமன்றின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments