Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக ஜனாதிபதி, பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கை!


நாடாளவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடளாவிய சகல கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் ஒரு இலட்சம் பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இவர்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கும் போது எத்தகைய அரசியல் பேதங்களும் இன்றி, தகைமைகளுக்கேற்ப ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதேவேளை அரசதுறையில் நிலவும் மனிதவள இடைவெளிகளை நிரம்புவதற்காக 54 ஆயிரம் பட்டதாரிகளை இணைத்துக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments