Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

காரைதீவில் பன்மைத்துவ கலாசார நிகழ்வு

கிழக்கு மாகாண பன்மைத்துவ கலாசார மற்றும் முதுகலைஞா் கௌரவிப்பு நிகழ்வு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச கலாசார மண்டபத்தில் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பன்மைத்துவ கலாசார மற்றும் முதுகலைஞா் கௌரவிப்பு நிகழ்வில் விருந்தினா்கள் தமிழ் இன்னியத்துடன் வரவேற்கப்பட்ட னர்.

நிகழ்வில் தமிழ்,சிங்கள,முஸ்லிம்,பறங்கிய இன கலைஞர்களின் அரங்க ஆற்றுகைகள், முதுகலைஞா் கௌரவம் என்பனவும் நடைபெற்றன.


முதுகலைஞா் கௌரவம் -2019 ல் தம் வாழ்நாளில் கலைஇலக்கியத்துறைக்கு அா்ப்பணிப்புமிகு சேவையாற்றிய தமிழ், முஸ்லிம் , சிங்கள, பறங்கிய இனங்களை சார்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட 45 முது கலைஞா்கள் காரைதீவு கலாசார மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டனா்.

Post a Comment

0 Comments