Home » » புதிய கல்விக் கொள்கையை ஆராய விசேட குழு

புதிய கல்விக் கொள்கையை ஆராய விசேட குழு



சமகால அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் தொடர்பில் ஆராய்ந்து மறுசீரமைப்புக்கான சிபாரிசுகளை முன்வைக்க நான்கு பேர்கொண்ட விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ஆயிரம் தேசிய பாடசாலைகளை உருவாக்குதல், மேலதிகமாக 53,000மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்குதல், மாவட்ட அடிப்படையில் காணப்படும் இஸட் ஸ்கோர் முறையை பாடசாலை அடிப்படையில் மாற்றியமைத்தல் உட்பட பல முக்கிய தீர்மானங்களை புதிய அரசாங்கம் எடுத்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் புதிய கல்விக் கொள்கைகள் தொடர்பில் ஆராயந்து நடைமுறைப்படுத்துவதற்கான சிபாரிசுகளை முன்வைப்பதற்காக நான்கு பேர்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் மேலும் கூறுகையில்,

அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக நடைமுறை படுத்துவதற்காக தொழில்நுட்ப மற்றும் கொள்கை ரீதியிலான வழிகாட்டியை வழங்குவதற்காக கல்வி தொடர்பான சிறப்பு செயலணி ஒன்று அமைக்கப்படுவது அத்தியாவசியமாகும்.

இதற்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு ஆலோசனைத் திட்டங்களையும் மூலோபாயங்களையும் அடையாளம் காணுதல், நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குதல், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழிகாட்டிகளை வழங்குதல், ஒழுங்குபடுத்துதல் மற்றும் மீள்தரவுகளை வழங்குவதற்காக கல்வி சிறப்பு செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |