Home » » ஆறு மாதங்களுக்கு முன்னரே கோட்டாபய வகுத்த திட்டம்!

ஆறு மாதங்களுக்கு முன்னரே கோட்டாபய வகுத்த திட்டம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்நாட்டு பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆறு மாதங்களுக்கு முன்னரே உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார் என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் வீதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் ​பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
குருநாகலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உறுதிமொழிக்கமைவாக இந்நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தும் நோக்குடன் இலகுவான வரிமுறையொன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும்போது இந்நாட்டை செயற்படும் நாடாக மாற்றியமைப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். செயற்படும் நாடாக மாற்றியமைக்கும் பொருட்டே நாம் முன்னின்று செயற்படுகின்றோம்.
பொருளாதாரத்தை பலப்படுத்துவோம். வரிகளை குறைத்துள்ளோம். வரிகளை குறைத்த பின்னர் வருமானத்தை எப்படி ஈட்டுகின்றீர்கள் என வினவுகின்றார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரச வருமானத்தை நூறு வீதத்தால் அதிகரித்ததாக குறிப்பிட்டார்கள்.
அதாவது ரணில் விக்ரமசிங்கவின் பையிலிருந்து பணத்தை இடுவதைப் போல் காட்டிக்கொண்டார்கள். அரசாங்க வருமானத்தை நூறு வீதத்தால் அதிகரிக்கும் பொருட்டு இந்நாட்டு மக்களின் பைகளிலிருந்தே பணத்தை பெற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் ஏன் அரசாங்க நிறுவனங்களை நூறு வீதத்தால் அதிகரித்தார்கள். மக்களுக்குச் சொந்தமான மத்திய வங்கியிலிருந்த மூன்று மாத காலத்திற்குள் கொள்ளையிட்ட பணத்தையும் இந்நாட்டு மக்களே மீள செலுத்த நேரிட்டது.
அதன் காரணமாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முதல் பத்து நாட்களுக்குள் இலகுவான வரிமுறையொன்றை அறிமுகம் செய்து, இந்நாட்டு பொருளாதார நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஆறு மாதங்களுக்கு முன்னரே உரிய தீர்மானங்களை மேற்கொண்டுள்ளார்.
இது ஒரு சாதாரணமான போராட்டமல்ல. மிகவும் கடினமான போராட்டம். இவ் வெற்றியை ஒரு போதும் மறக்கமுடியாது. ஒரு போதும் மறக்கவும் கூடாது. இப்போராட்டம் இன்னும் நிறைவடையவில்லை. இரு வாரங்களுள் சுவிஸ் நாடகம் அரங்கேற்றப்பட்ட முறையை அனைவரும் கண்டார்கள்.
மக்களால் அதிகாரத்திற்கு கொண்டுவந்த ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செயற்பட்டதை கண்டார்கள். அதனால் தான் இப்போராட்டம் நிறைவடையவில்லை என நான் கூறினேன். அதனை ஒரு போதும் மறக்கக்கூடாது” என்றார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |