Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மௌனம் கலைத்தார் சஜித்! தீர்மானமிக்க முடிவோடு இன்று களமிறங்குகிறார்


புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸ இன்று மீண்டும் தனது அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய சஜித் பிரேமதாஸ, கொழும்பு 2 வோக்ஷோல் வீதியில் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் தனது நெருக்கமான சிலரை சந்திக்க தீர்மானித்திருந்தார்.
இன்று விகாரைகளுக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டு, மக்களை சந்திப்பதற்கு சஜித் பிரேமதாஸ நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் சஜித் தனக்கு நெருக்கமான உறுப்பினர்களை சந்தித்து எதிர்வரும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும், நேற்று அவர்களை மீண்டும் சந்தித்தார் என குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சியின் ஆலோசகராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்துவிட்டு சஜித் பிரேமதாஸவை கட்சித் தலைவராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் நியமிக்க தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments