Home » » பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்தரணிகளாக பணியாற்றத் தடை!

பல்கலைக்கழக ஆசிரியர்கள் சட்டத்தரணிகளாக பணியாற்றத் தடை!

பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் போதனைசார் பணியாள் தொகுதியினர் எவரும் சட்டத்தரணிகளாகச் செயற்பட முடியாது என்றும், போதனைசார் பணியாளர்கள் தமது வழக்கமான பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில், அவ்வப் பல்கலைக்கழகங்களின் - கல்வி நிறுவனங்களின் பேரவை அனுமதியுடன் நொத்தாரிசுக்களாக பணியாற்ற முடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முடிவு செய்திருக்கிறது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தின் அவதானங்களுக்கு அமைவாக 21.11.2013 அன்று நடைபெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 885 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து, 05.09.2019 இல் நடைபெற்ற ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 1017 ஆவது கூட்டத்தில் இந்தத் தீர்மானம் உறுதி செய்யப்பட்டிருதது.
இதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மெஹானட டி சில்வா, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் 10 / 2019 ஆம் இலக்க தாபனச் சுற்றறிக்கையின் மூலம் சகல பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும் அறிவித்திருக்கிறார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |