Home » » எதிர்க் கட்சித் தலைவராக உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் சஜித்!

எதிர்க் கட்சித் தலைவராக உத்தியோகபூர்வமாக பதவியேற்கும் சஜித்!

தை மாதம் கூடும் நாடாளுமன்ற அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவராக அறிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் கருஜய சூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.
8 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தையடுத்து பிற்பகல் 12.30 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் நடாத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டது. இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதியிலிருந்து சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முறைமைகள் குறித்து அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கும் இன்று நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் போது புதிய நாடாளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொள்ள உள்ளார். சபாநாயகர் கருஜய சூரிய நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தல் மற்றும் சிம்மாசன உரையின் அறிவிப்புக்களை ஒழுங்குமுறைப்படி அறிவிப்பதற்கும் கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சபாநாயகருக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய ஜனவரி 3 ஆம் திகதி அமர்வின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன் போது கட்சி தலைவர்களுக்கு அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் தொடர்பிலும் ஜனவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் அறியப்படுத்துமாறு ஆளுந்தரப்பினர் சார்பில் கலந்து கொண்டவர்களிடம் சபாநாயகர் கருஜய சூரிய அறிவித்தார்.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் இதன் போது அதிக அவதானம் செலுத்தப்பட்டது.
அவர் கைது செய்யப்பட்டமை நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என்பதே ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதான நிலைப்பாடாக இன்றைய கட்சி தலைவர் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட அதிகாரிகள் சபாநாயகரை சந்தித்து தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கைது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்தின் கொண்டு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |