Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை மாநகர முதல்வரின் அறிவிப்பு


கல்முனை மாநகர சபை எல்லைக்குள் டிசம்பர் மாத பாடசாலை விடுமுறை காலத்தில் தனியார் கல்வி நிலையங்களை மூடுவது தொடர்பிலான அறிவிப்பு எதுவும் மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்களினால் விடுக்கப்படவில்லை.
நாளை திங்கள் (02)மற்றும் நாளை மறுதினம் செவ்வாய் (03)ஆகிய தினங்களில் டியுட்டரி நடத்துனர்களுடன் மாநகர முதல்வர் நடாத்தவுள்ள கலந்துரையாடலின்போதே இது தொடர்பிலான தீர்மானம் எடுக்கப்படும்.
இது விடயமாக சில இணையத்தளங்களிலும் முகநூல்களிலும் இன்று (01/12/2019)தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து டியுட்டரிகளும் மூடப்பட வேண்டும் என மாநகர முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் தவறானது என்று மாநகர முதல்வரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments