Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கல்முனைப் பிரதேசத்தில் மனித நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப்பொருட்கள் விற்பனை!!

- செ.துஜியந்தன் -
கல்முனைப் பிரதேசத்திலுள்ள பல சரக்குக் கடைகளில் மனித நுகர்வுக்குப் பொருத்தமில்லாத உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுவருவதாக நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பில் பிரதேச சுகாதாரப்பரிசோதகர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.

எதிர்வரும்பண்டிகை காலங்களை முன்னிட்டு கல்முனை பிராந்தியத்தில் வியாபார நடவடிக்கைகள்மும்முரமாக நடைபெற்றுவருகின்றது இந்நிலையில் வருட இறுதிப்பகுதியாகையினால் இங்குள்ள பல சரக்கு விற்பனைக் கடைகளில் காலாவதியான பொருட்களை நல்ல பொருட்களுடன் கலந்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் சில வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் தூர இடங்களில் இருந்து வந்து பொருட்களை கொள்வனவு செய்யும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

இங்குள்ள சில கடைகளில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தப்படாமை, விலைகட்டுப்பாட்டை விட அதிக விலைக்க பொருட்களை விற்பனை செய்தல், முத்திரை பொறிக்கப்படாத தராசுகளினால் பொருட்களை நிறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோன்ற சிற்றூண்டிச் சாலைகளிலும் பழுதடைந்த உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதேபோன்று பழுதடைந்த பழங்களும் விற்பனை செய்கின்றனர். இவ்வாறு மக்களை ஏமாற்றி தரமற்ற பொருட்களைவ pற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை அம்பாறை மாவட்ட பாவனையாளர் அதிகாரசபையினால் வியாபார நிலையங்கள் கண்காணிக்கப்பட்டு சட்டவிரோத வியாபாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

Post a Comment

0 Comments