Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முழுவதுமாக ஸ்தம்பித்தது டெல்லி ! 19 விமானங்கள் ரத்தானதாக தகவல்

டெல்லியில் நடந்த போராட்டத்தால் 19 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தால் டெல்லி முழுவதும் இன்று ஸ்தம்பித்தது. 
எல்லா சாலைகளும் முடங்கும் அளவுக்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. 
இதனால் விமானநிலையத்திற்கு செல்ல வேண்டியவர்கள் உட்பட பலர் அவதிக்கு ஆளாகி உள்ளனர். 
இதனால் குறைந்தது 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் விமான நிலைய ஊழியர்களால் சரியான நேரத்தில் விமான நிலையத்தை அடைய முடியாததால், மொத்தம் 16 விமானங்களும் தாமதமாக புறப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். 
டெல்லியில் இருந்து எட்டு விமானங்கள் 20 முதல் 100 நிமிடங்கள் தாமதமாக வந்ததாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments