Home » » மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் டெங்கு நோயாளர்கள்



மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதோடு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வந்த சீரற்ற காலநிலை காரணமாக அதிகளவிலான டெங்கு நுளம்புகள் பெருக்கமடைந்தன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை 1879 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்றுள்ளனர்.
அந்தவகையில் கடந்த டிசம்பர் 06ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 13ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 128 பேர் டெங்குநோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயற்பட்டு, வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிபனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |